மார்ச் மாத ராசிபலன் சிம்மம் 2025:
மார்ச் மாத ராசிபலன் சிம்மம் 2025: சிம்மராசி அன்பர்களுக்கு இந்த மார்ச் மாதத்தின் கிரக நிலைகளை பொறுத்தவரையில் கலவையான பலன்கள் உண்டாகும்.
இந்த மாதம் சிம்மராசி அன்பர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும் குடும்ப உறவுகளில் பதட்டங்கள் மற்றும் உடல்நல கோளாறுகள் அவ்வப்போது வந்து செல்லும்.
இதற்கு மத்தியில் குரு பகவானின் ஆதரவு வழிகாட்டும் 12 rasipalanகாரணியாக அமையும் குடும்பத்தில் அவ் போதுமான கசப்பு மற்றும் கருத்து வேறுபாடு வரலாம் அதனால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

இந்த மாதம் சிம்ம ராசி அன்பர்களுக்கு வீடு மாறுதல் இடம் மாறுதல் போன்ற நிகழ்வுகள் நடக்கும்.
சிம்மராசி அன்பர்களுக்கு காதல் மற்றும் உறவு விஷயங்களில் சோதனையான காலம் வரும் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் மற்றும் சங்கடமான தருணங்கள் வரலாம் அதனால் கவனமாக இருங்கள்.
உங்கள் வாழ்க்கைத் துணையின் கருத்தை அங்கீகரிப்பதன் மூலம் உணர்ச்சி பூர்வமான நல்ல தருணத்தை உணரலாம்.
வருமானம் அல்லது மறைமுக ஆதாரங்களில் இருந்து நிதி ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த மாதம் உங்களுக்கு நிதி செழிப்பு இருந்தாலும் அதிக செலவு செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது மருத்துவ செலவுகள் வரலாம் கூடுதலாக வீட்டில் பழுது பார்ப்பது புதுப்பித்தல் பராமரிப்பது தொடர்பான செலவுகள் வரும் எச்சரிக்கையாக இருங்கள்.
பங்கு சந்தையில் முதலீடுகள் என்று வரும் பொழுது வர்த்தக மற்றும் ஊகங்களை செய்வதற்கு இது சரியான நேரம் இல்லை.
ஆன்மீகம் மற்றும் பிற சுப காரியங்களுக்காக செலவுகள் ஏற்படும். இந்த மாதம் உத்யோகத்தில் உள்ள சிம்ம ராசி அன்பர்களுக்கு சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு அல்லது தவறான புரிதல்கள் வந்து ஒரு சில வனக்கசப்புகள் வரும்.
தவறான புரிதல்களால் பல பிரச்சனைகள் வரும் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத வருமானம் அல்லது மறைந்துள்ள ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் அங்கீகாரம் மன அழுத்தத்தில் இருந்து சிறிது நிவாரணம் கொடுக்கும்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வியாபாரத்தில் பொறுமை மற்றும் சமரசத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது.
மறைமுக ஆதாரங்கள் சிறிய நிதி ஆதாயத்தை உண்டாக்கும்https://youtu.be/rnKVwWyJFoU அதிகரித்த வரிகள் மற்றும் நிர்வாக செலவுகள் வணிகத்தின் செயல்பாட்டில் இது சுமைகளை ஏற்படுத்தும்.
சுருங்கும் வாடிக்கையாளர் தளம் வருவாய் குறைவதற்கு வழிவகுக்கும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு பொருத்தமான யுக்திகளை கையாள்வது இந்த காலகட்டத்தில் நல்லதாய் அமையும்.

உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் உங்கள் மனம் மற்றும் உணர்ச்சி அழுத்தங்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கலாம்.
இது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமே குழைக்கும் எலும்புகள் மற்றும் தசைகள் தொடர்பான எதிர்பாராத பிரச்சனைகளுக்கு இந்த மாதம் வாய்ப்பு இருப்பதால் கவனமாக உடல் ஆரோக்கியத்தில் செயல்படுவது நல்லது.

அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக கவனமாகவும் செயல்படுவது நல்லது முடிந்தவரை கோபத்தை குறைத்துக் கொண்டு அனுசரித்துப் போவது நன்மையை ஏற்படுத்தும்.