மகர ராசி குணாதிசயங்கள் !
மகர ராசி குணாதிசயங்கள் ! மகரம் என்பது கடல் வீடு. கடலின் அலைகள் எப்படி அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கின்றனவோ அதுபோல இவர்கள் மனதிலும் புது புது எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்குங்க.
எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சோர்வு அடையமாட்டாங்க. வாழ்க்கையில் தோல்வி அடைந்து அதல பாதாளத்துக்குச் சென்றாலும் மறுபடியும் வீறு கொண்டு எழுந்து நிற்பாங்க.
இவர்களின் ராசிக்கு அதிபதியான சனி பகவான் கிரகசுபாவத்தை அதிகம் கொடுக்கும் கிரகம் என்பதால் எதிலும் மனித நேயத்தோடு செயல்பட விரும்புவாங்க. சிரிக்க சிரிக்க பேசும் சுபாவமும் கூட இவர்களிடத்தில் காணப்படும்.

மகர ராசிக்காரங்க மிகவும் ஈகை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டாங்ககும்ப ராசி குணாதிசயங்கள் !. மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டவும் மாட்டாங்க.
இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகமாகவே இருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாங்க.
எந்த காரியத்தில் இறங்கினாலும் அதில் இரண்டு விதமான ஆதாயங்களை எதிர்பார்ப்பாங்க. மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் தேவைக்கேற்ப அமையுங்க. உழைப்பாற்றலால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வாங்க.
வரவேண்டிய பணவரவுகள் தாமதமாக இருந்தாலும் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக காப்பாற்றி விடுவார்கள்.
மகர ராசி குணாதிசயங்கள் !
சுகத்தையும் அமைதி அனுபவிக்க நினைத்த போதிலும் எதையும் அனுபவிக்க https://youtu.be/soWtPFFNlxYமுடியாமல் பொருளீட்ட வேண்டி இருக்குங்க. பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் இவர்களுக்கு பெரும்பாலும் பயன்படாமல் போகலாம். செலவு செய்வதில் தயக்கம் காட்ட மாட்டாங்க.
சேமிக்கும் பழக்கம் என்பது இவர்களிடம் குறைவாகவே இருக்குங்க. மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும்.
பெற்றவர்கள் பிள்ளைகள் மேல் அதிக அன்பு கொண்டிருப்பாங்க. தான் கஷ்டப்பட்டாலும் மற்றவர்கள் மனம் கோனாத அளவுக்கு நடந்து கொள்வாங்க.
இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாக்கு கொடுக்க மாட்டாங்க.
வாக்கு கொடுத்து விட்டால் அதை எப்படியாவது முடித்துக் கொடுத்து விடுவார்கள். மகர ராசிக்காரர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவாங்க.
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும் வெற்றியும் பெறுவாங்க. இவர்களுக்கு வாழ்வின் பகுதியை விட பிற்பகுதி தான் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.
மகர ராசிக்கு இரண்டாம் இடமான தன குடும்ப ஸ்தானத்திற்கும் சனி அதிபதி என்பதால் அதிக அளவில் பணம் வைத்து கொண்டு இருந்தாலும் திடீரென்று ஏற்படும் செலவுகளுக்காக பணத்தை தேடுவாங்க.
பொருளாதாரத்தை பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும். வாழ்க்கைத் துணையைப் பற்றி சொல்லும் ஏழாம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார்.
உங்களுடைய வாழ்க்கைத் துணை ரசனை மிக்கவராக இருப்பாங்க. இவர்களை விட நிதானமாக யோசித்து செயல்படுவதாக இருப்பாங்க.
இவர்களின் வேகமான செயல்பாடுகளை விவேகத்துடன் சமாளிப்பாங்க. வாக்கு சாதுரியம் பெற்று இருப்பாங்க. இவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்து ஒற்றுமையுடன் செயல்படுவாங்க.