குடவரைக் காத்து நிற்கும் கொல்லிப் பாவை!
குடவரைக் காத்து நிற்கும் கொல்லிப் பாவை! இயற்கை எழில் கொஞ்சும் ரம்யமான சூழல் நிறைந்த நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருக்கிற மேல் கலிங்கப்பட்டு என சொல்லப்படுகிற
இடத்தில் அமைந்திருக்கக் கூடிய ஆலயம் தான் எட்டுக்கை மாரியம்மன் ஆலயம் இவளை கொல்லிப்பாவை எனவும் அழைக்கிறார்கள்!
ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு இடையில் பற்றி படர்ந்து பசுமை தூண் போல விளங்கும் அருமையான ஆலயம் தான் இந்த ஆலயம்
அறிவியல் மிளகுக் கொடிகளும் ஓடைகளும் குன்றுகளும் வயல்வெளிகளும் மிக அற்புதமான மனதை மயக்கும் பிரம்மியம் நிறைந்த ஆலயமாக இந்த ஆலயம் நிறைந்திருக்கிறது
ஆலய வழிபாட்டிற்கு மட்டும் இன்றி மனதின் சூழலை உற்சாகப்படுத்தும், செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ரம்மியம் நிறைந்த இடமாக அமைந்திருக்கிறது!
இந்த ஆலயம் சாலைக்கு இணையான சமதளத்திலோ அல்லது குன்றின் உச்சிலோ அமைந்திருக்கவில்லை மாறாக பூமி வட்டத்தில் இருந்து கீழ்நோக்கி
பல பணிகள் சென்று கடந்தால்தான் கம்பீரமாக காட்சியளிக்கிறாள் கருவறையின் மூலவராக அருள்பாலிக்கும் மாரியம்மன் க்கு 8 கைகள் இருப்பது தனி சிறப்பாக சொல்லப்படுகிறது
இந்த ஆலயத்தை கொல்லிப்பாவை ஆலயம் எனவும் சொல்கிறார்கள் இந்த அம்மன் பக்தர்களுக்கு பல வரங்களை வாரி வழங்கினாலும் கூட சிறப்பான வரங்களை தருவதில் குறிப்பிடக்கூடிய விஷயமாக பார்க்கப்படுவது
குடவரைக் காத்து நிற்கும் கொல்லிப் பாவை! குழந்தை பேற்றை! குழந்தை பேச்சை அருளுவதில் வரப்பிரசாதியான தெய்வமாக விளங்கி வருகிறார்
அதை மெய்ப்பிப்பதை போலவே மழலை செல்வம் வேண்டுகோள் இக்கோவிலில் மரக்கிளையில் தொட்டிலை கட்டி பிரார்த்திப்பதை பார்க்க முடியும்!
இ கோயிலில் இன்னொரு ஆச்சரியம் உண்டு கிளைகளிலும் தூண்களிலும் சூழாயிரத்திலும் ஆண் மற்றும் பெண்களின் ஆடைகளை ஒன்றாக முடி போட்டு தொங்க விட்டிருப்பார்கள் இது ஆச்சரியப்பட விஷயமாக சொல்லப்படுகிறது
இதற்கு காரணம் என்னவென்று கேட்கும் போது கருத்து வேற்றுமையால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இங்கே வந்து ஒற்றுமை வேண்டி இந்த மாதிரி முடிச்சு போட்டு வேண்டிக்கொள்கிறார்கள்!
அவர்களின் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறுவதாகவும் சொல்கிறார்கள்! https://youtu.be/O9jd4rsvUaQஇன்னொரு பக்கம் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் பலவிதமான பூட்டுக்கள் பூட்டப்பட்டு தொங்க விடப்பட்டிருக்கிறது!
அதற்கான காரணம் கேட்டபோது வழக்கு, தகராறு, சண்டை, சச்சரவு மாதிரி பிணக்குகள் தீர இப்படி நேர்ந்து கொள்வதாக சொல்கிறார்கள்
சிலர் தங்கள் வேண்டுதல்களை செப்பு தகடு ஒன்று எழுதி ஆலய வாளகத்தில் கட்டி விட்டும் செல்கிறார்கள்!
இந்த கோவிலின் தல வரலாறை கேட்டபோது சதுரகிரி மலையில் இருந்து வந்த சித்தர்கள் 18 பேரால் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருந்தது வன விலங்குகளால் ஆபத்து எதுவும் வந்து விடக்கூடாது
என்பதற்காக இந்த ஆலயத்தை அவர்கள் நிர்மாணித்திருக்கலாம் எனவும் செல்லப்படுகிறது சித்தர்களின் கண்ணுக்கு மட்டுமே நேரில் அம்மன் காட்சி கொடுத்ததாகவும்
இந்த அம்மன் குழந்தை வடிவில் காற்று தந்ததால் இந்த அம்மனை கொல்லிப்பாக எனவும் அழைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள்!