கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்கள் !
கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்கள் ! கற்பூரவள்ளி மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகை செடியாகுங்க. நரம்புகளுக்கு சத்து மருந்தாகுதுங்க.
மனக்கோளாறுகளை சரி செய்யும். சிறுநீரை எளிதில் வெளிக்கொணரும் தன்மை கொண்டதுங்க. கசப்பு சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகுங்க.
கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும் தன்மை கொண்டது. தசைகள் சுருங்குவதை தடுக்கும். கற்பூரவள்ளியின் தண்டும், இலைகளும் பயன் தரக்கூடியதாக இருக்குதுங்க.
கற்பூரவள்ளி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகவும் பயன்படுதுங்க.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படக்கூடியது இந்த கற்பூரவள்ளி இலை.
இலை, காம்புகளை குடிநீராகி கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும்.மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம் இலைச்சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலை காம்புகளை குடிநீர் ஆக்கி கொடுக்க இருமல் சளி காய்ச்சல் போகும். கற்பூரவள்ளி இலைகளை எடுத்து கழுவி சாரெடுத்து இரண்டு மில்லி லிட்டர் சாறுடன் கேட்டு மில்லி லிட்டர் தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரக்கூடிய தன்மை கொண்டதுங்க.
கற்பூரவள்ளி மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இயற்கையான செடி இலைகள் மிகவும் மென்மையாக பச்சை நிறத்தில் இருக்கும் காரத்தன்மையுடன் நீர்ச்சத்து கொண்டதுங்க.
இதனை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது என்றாலும் சிலருக்கு காரத்தன்மை ஒப்புக்கொள்வது தேநீரில் போட்டு அருந்தலாம் அல்லது கசாயம் செய்து குடிக்கலாம்.
கிராமங்களில் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மார்புச்சளி இருமல் மற்றும் காய்ச்சல் வரும்போது இதனை பயன்படுத்து வாங்க.
சளி மற்றும் இருமலை போக்க பெரிதும் உதவுதுங்க. நுரையீரல் தொடர்பான https://youtu.be/DNk6HJ1E8goபிரச்சனைகளுக்கும் ஆஸ்துமாவுக்கும் இயற்கையான சிகிச்சை பொருளாக பயன்படுதுங்க. செரிமானத்திற்கு உதவுகிறது.
சிலர் உணவுகளில் கூட பயன்படுத்துறாங்க. எந்த ஒரு சூழ்நிலையிலும் எளிதாக வளரக்கூடிய தாவரம் என்பதால் வீட்டில் வளர்க்கலாங்க. குறிப்பாக மழைக்காலங்களில் வேகமாக படர்ந்து வளரும் தன்மை கொண்டதுங்க.
விஷக்கிருமிகளை முறிக்கும் தன்மை கொண்டதாலேயே முன்னோர்கள் வீட்டில் முன் துளசி கற்பூரவள்ளி செடியை வளர்ப்பது உண்டுங்க.
கற்பூரவள்ளி இலைகளை காய வைத்து பொடி செய்து பயன்படுத்தலாம். கற்பூரவள்ளியில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகிய சத்துகள் இருக்குதுங்க.
சளி மற்றும் இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை 5 மில்லி கிராம் அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்பு சளி குணமடையுங்க.
கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக்கூடியதுங்க. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச் சளி நீங்கவும் அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா காச நோயாக கூட மாற நேரிடும்.